Side effects of wearing diapers to kids (குழந்தைகளுக்கு டயபர் அணிவதால் ஏற்படும் பக்க விளைவுகள்)

 டயபர் அணிவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

1. ஓவாமையை(அலர்ஜி) உருவாக்கும்

குழந்தைகளின் தோல் மிகவும் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். ஏதேனும் கடுமையான, கூர்மையான பொருள்கள் அவர்களின் மேல் பட்டால் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு சில டயபர் உற்பத்தியாளர்கள் இழைகள், சாயங்கள் அல்லது பிற கடுமையான இரசாயன பொருட்கள் போன்றவை பயன்படுத்துவார்கள். இவைகள் குழந்தைகளுக்கு ஓவாமையை (அலர்ஜி) உருவாக்கும். குழந்தைகளின் தோல் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருள்களால் செய்யப்பட்ட டயபர்களை பயன்படுத்துவது சிறந்தது.

2. தோல் தடிப்புகளை உருவாக்கலாம்.

டயபர் தடிப்புகள் குழந்தைகளிடத்தில் தோன்றுவது பொதுவானவை. ஈரமான டயப்பரை குழந்தையின் மீது வழக்கத்தை விட நீண்ட நேரம் வைத்திருந்தால், ஈரமான அழுக்கடைந்த டயப்பரில் பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யலாம் அதனால் தடிப்புகளுக்கு வழிவகுக்கும். அடிக்கடி டயபர்ஸை சரிபார்த்து கொள்ளவேண்டும்.

3. நச்சுத்தன்மை உருவாக்க வழிவகுக்கும்

டயப்பர்கள் ரசாயனங்கள் மற்றும் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன; இது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைக்கு 8-10 வரை டயப்பர்கள் பயன்படுத்துவோம். சில இரவுகளில் அடிக்கடி மாற்ற வேண்டி இருந்தால் 10க்கு மேலேயும் தேவை படும். இப்படி வீரியமிக்க ராசயங்களால் உருவாக்கப்பட்ட டயப்பர்களினால் நச்சுத்தன்மையின் பாதிப்பு குழந்தைகளுக்கு இருக்க கூடும்.

4. கிருமித்தொற்றுக்கான அதிக வாய்ப்புகள்

சில நேரம் குழந்தைகள் ஒரு முறை சிறுநீர் போனதும் உடனே மாற்றாமல் தொடர்ந்து அதையே பயன்படுத்துவர். ஒரு சிலர் அதன் எடையை பொறுத்து வேறொரு டையப்பரை மாற்றுவார்கள். உங்கள் குழந்தையின் சிறுநீரை உறிஞ்சுவதற்கு ஏதுவாக இருக்கும் ஒரு பொருளைக் கொண்டு டயப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன, அதே பொருள் உங்கள் குழந்தையின் டயப்பருக்குள் எளிதில் காற்று புகுவதைத் தடுக்கலாம் மற்றும் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற நிலையை உருவாக்குகிறது. தொடர்ந்து நீண்ட நேரம் பயன்படுத்தும் டையப்பர்களால் கிருமித்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

5 அதிக  விலை கொண்ட டயப்பர்கள்

நீங்கள் டயப்பர்களை மட்டுமே நம்பினால், அது உங்கள் சேமிப்பு அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை செல்வழிக்கக்கூடும். சராசரியாக, ஒரு நாளில் உங்கள் குழந்தைக்கு எட்டு முதல் பத்து டயப்பர்களை மாற்ற வேண்டியிருக்கும் சமயங்களில் இன்னும் அதிகமாக தேவை இருப்பின், சந்தையில் நல்ல பொருட்களால் செய்யப்பட்ட பல டயப்பர்களும் மலிவு விலையில் உள்ளன அவைகளை நாம் பயன்படுத்தலாம்.

6. குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியில் சிக்கல்

ஆரம்ப நாட்களில் அவர்கள் டையாபர்களில் சிறுநீர் கழிப்பதற்கு, துடைப்பதற்கு பழகியதால், பெற்றோர்களும் அதை வசதியாக காண்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடர்ந்து டயப்பர் பயன்படுத்துவதால், பின்னாளில் கழிப்பறையை பயன்படுத்தும் முறை பற்றி கற்பிக்கும் போது அவர்கள் அடம்பிடிக்கலாம் அல்லது சிணுங்கலாம். நாம் வழக்கமாக வாழ்க்கையின் ஆரம்பத்தில் தொடங்கும் கழிப்பறை பயிற்சி பாடங்கள் இன்றைய உலகில் டயப்பர்களை அதிகம் பயன்படுத்துவதால் அதன் முக்கியத்துவத்தை இழக்கக்கூடும். உங்கள் குழந்தைக்கு கழிப்பறை பயிற்சி அளிக்க நேரம் செலவிடுவது மிக அவசியம்.

7. டயப்பர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல

அதிகமான டையப்பர்களை பயன்படுத்தும் போது, அது சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், வேதியியல் ராசயங்கள் மற்றும் செயற்கை இழைகள் போன்றவைகளை அழிக்கும் போதோ அல்லது மறு சுழற்ச்சி செய்யும் போதோ சுற்றுசூழலை பாதிக்கும். சில உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருள்களை கொண்டு உற்பத்தி செய்கின்றனர். அந்த டையப்பர்களை சந்தையில் தேடி பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.

டையப்பர்களுக்கு பதிலாக மாற்று வழி

1. துணிகளால் செய்யப்பட்ட டயப்பர்கள்

துணிகளால் செய்யப்பட்ட டயப்பர்கள் உங்கள் குழந்தையின் தோலுக்கு தீங்கு விளைவிக்காது மட்டுமல்லாது, சுற்றுசூழலுக்கும் உகந்தது மற்றும் மறுபடியும் பயன்படுத்தலாம். நாம் அதனை அடிக்கடி நன்றாக துவைத்து வெயிலில் உலர வைத்து குழந்தைகளுக்கு அணிவிக்கலாம். துணிகளால் செய்யப்பட்ட டயப்பர்கள் வாங்கும் போது தரமான பருத்தி துணிகளால் செய்யப்பட்ட டையப்பர்களை வாங்க வேண்டும்.

2. டயபர் லைனர்களைப் பயன்படுத்தலாம்

டயபர் லைனர்கள் சந்தையில் எளிதில் அதிகம் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் துணி டயப்பருக்குள் வைக்கலாம். இவற்றை எளிதில் மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம், மேலும் எளிதில் சுத்தப்படுத்தலாம்.

3. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத டயப்பர்கள்

இது பெற்றோர்களின் மாதாந்திர செலவினத்தை குறைக்கிறது. இவை சுற்றுசூழலுக்கு எந்தவித மாசும் விளைவிக்காது மற்றும் உங்கள் குழந்தையின் தோலுக்கும் மென்மையாக இருக்கும்.

குழந்தைகளின் டயப்பர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

1. டயப்பர்கள் நன்றாக உறிஞ்ச வேண்டும்.

குழந்தைகளின் சருமத்திற்கு மிருதுவாகவும், தடிப்புகள் ஏற்படுத்தாத பொருட்களால் செய்யப்பட்ட டையபர்களாக இருக்க வேண்டும். மற்றும் எளிதில் ஈரப்பதத்தை உறிந்து, குழந்தைகளின் தோலில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

2. உற்பத்தி செய்யப்பட்ட மூலப்பொருட்கள்

மென்மையான, ரசாயனமில்லாத சுத்தமான பருத்தி நூலால் செய்யப்பட்ட டயபர்கள் குழந்தையின் மென்மையான தோலை எரிச்சலூட்டுவதில்லை, எந்தவிதமான தடிப்புகளையும் ஏற்படுத்தாது. உங்கள் குழந்தைக்கு வசதியாகவும், ஒவ்வாமை / சொறி இல்லாததாகவும் இருக்க மென்மையான டயப்பர்களை தேர்ந்தெடுங்கள்.

3. சரியான அளவுகளில் இருத்தல் வேண்டும்

ஈரப்பதத்தை கசிய விடாமல் இருக்க சரியான அளவுகளை தேர்வு செய்யவேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கலாம்.

4. துணி டயப்பர்களின் விலை

இந்த மாதிரியான டயபர்களின் விலை நமது மாதாந்திர செலவு கணக்குகளுக்குட்பட்டு வர வேண்டும். சந்தையில் நிறைய உற்பத்தியாளர்கள் தரமான டையபர்களை குறைவான விலைக்கு கொடுக்கின்றனர். நாம் கொஞ்சம் நேரம் செலவிட்டு தேடிப்பார்த்து வாங்க வேண்டும்.


மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். டயப்பர்கள் நிச்சயமாக பயன்படுத்த எளிதானவை, ஆனால் அவை சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன. எனவே, நாம் தான் சிறிது நேரம் செலவிட்டு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பயனளிக்கும் வகையில் சிறந்த டையப்பர்களை தேர்வு செய்ய வேண்டும்.

டாக்டர் அர்வா பாவனகர்வாலா MBBS, DNB (Masina Hospital Mumbai).

No comments

Powered by Blogger.