மியாவ் மியாவ் பூனைக்குட்டி (Miyaaw Miyaaw Poonaikutti)

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மீசை வச்ச பூனைக்குட்டி
பையப் பையப்
பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி
பளபளக்கும்
பளிங்குக் குண்டு
பளிச் சென்று
முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும்
விழி கண்டு
விரைந்தோடும்
எலியும் மிரண்டு
விரித்த பூவைக் கவிழ்த்தது போல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப் பிடிகள்
அழகு வண்ணக்
கம்பளி யால்
ஆடை உடுத்தி
வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி
விரட்டி விலங்கினைக் காட்டிலே
வீரங் காட்டும் புலியினமே
துரத்தி எலியை வீட்டினிலே
தொல்லை தீர்க்கும் பூனை தினமே
No comments